மத்தியப் பிரதேச மாநிலத்தில் 400 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவன் தன்மய் சாஹு சடலமாக மீட்ப்பு.
மத்தியப் பிரதேச மாநிலம், பெட்டுல் பகுதியில் டிசம்பர் 6ஆம் தேதி 400 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த எட்டு வயது சிறுவன் தன்மய் சாஹு 65 மணி நேர மீட்புப் பணிகளுக்குப் பிறகு சடலமாக வெளியே எடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
டிசம்பர் 6ஆம் தேதி தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் அருகிலிருந்த வயலுக்குச் சென்று விளையாடியபோது திறந்திருந்த ஆழ்துளைக் கிணற்றில் சிறுவன் தன்மய் சாஹு விழுந்துள்ளான். சிறுவனை தேடிச் சென்றபோது தனது மகனின் குறள் கேட்டதாக்கச் சிறுவனின் தந்தை கூறினார்.
இந்த சம்பவம் நடந்த உடனே டிசம்பர் 6 மாலை 6 மணி முதல் மீட்பு நடவடிக்கை தொடங்கியுள்ளது. சிறுவனை வெளியே எடுப்பதற்காக மண் அள்ளும் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு சுரங்கப்பாதை தோண்டப் பட்டு மீட்புப் பணிகள் நடந்துள்ளது. அப்பகுதி முழுவதும் கற்கள் இருந்ததால், நான்கு நாட்களுக்கும் மேலாக நடந்த மீட்பு நடவடிக்கைகள் தாமதமானதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் இறந்துவிட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரது உடல் பெதுல் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.