சென்னையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை

சென்னையில் இன்று அதிகாலையில் பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, சென்னையில் அடுத்த 24 மணி…

சென்னையில் இன்று அதிகாலையில் பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது.

தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னையில் நேற்று இரவு முதலே வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் நகரின் ஒருசில பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை 3 மணியளவில், நுங்கம்பாக்கம், அண்ணா சாலை, கோடம்பாக்கம், காமராஜர் சாலை, டி நகர், மந்தைவெளி, மயிலாப்பூர், தேனாம்பேட்டை, அடையார், பட்டினம்பாக்கம், ராயப்பேட்டை, சேப்பாக்கம், எழும்பூர், புரசைவாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, பட்டினம்பாக்கம், மெரினா, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், கூடுவாஞ்சேரி, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், பல்லாவரம், பம்மல், குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.