கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சபரிமலையில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சபரிமலை ஐயப்பன் கோயில் உட்பட்ட பகுதிகளில் மத்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதையும் படியுங்கள்: எனக்கு உடல்நிலை சரியில்லை, நாளை ஆஜராக வருகிறேன் – மன்சூர் அலிகான் கடிதம்!
- பக்தர்கள் முன் அறிமுகம் இல்லாத நீர் நிலைகளில் இறங்க வேண்டாம்.
- நிலக்கல் முதல் சன்னிதானம் வரை 39 தீயணைப்பு வாகனங்கள் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
- குழந்தைகளை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
- வனப்பகுதியில் உள்ளே செல்ல பத்தர்களுக்கு அனுமதி இல்லை.
- மகர விளக்கு சமயங்களில் உயரமான மலை மற்றும் உயரமான மரங்களில் ஓய்வு எடுக்க வேண்டாம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.







