இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை எதிரொலி | நிலச்சரிவால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

இமாச்சலப் பிரதேசத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவுகள், திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக…

இமாச்சலப் பிரதேசத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவுகள், திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக மாநிலம் முழுவதும் 128 சாலைகள் மூடப்பட்டன. இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் ஜூன் 27 முதல் ஆகஸ்ட் 9 வரை மழை தொடர்பான சம்பவங்களில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  இமாச்சலப் பிரதேசத்தில் நேற்று மாலை முதல் நஹன் (சிர்மவுர்) பகுதியில் 168.3 மிமீ மழை பதிவாகியுள்ளது.சந்தோலில் 106.4 மிமீ, நக்ரோட்டா சூரியனில் 93.2 மிமீ, தவுலகுவானில் 67 மிமீ, ஜப்பர்ஹட்டியில் 53.2 மிமீ மற்றும் கந்தகஹட்டியில் 45.6 மிமீ மழை பெய்துள்ளது.

மழை காரணமாக 44 மின்சாரம் மற்றும் 67 நீர் வழங்கல் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை வரை மண்டி, சிர்மூர், சிம்லா மற்றும் குலு மாவட்டங்களில் வெள்ள அபாயம் இருக்கும் என்றும் வானிலைத் துறை எச்சரித்திருந்தது. மேலும், ஹமிர்பூர் மாவட்டத்தில் கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், ஹமிர்பூர் துணை ஆணையர் அமர்ஜித் சிங், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், ஆறுகள் மற்றும் ஓடைகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்கவும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படியுங்கள் : வயநாடு நிலச்சரிவு: நிவாரண முகாம்களில் தங்கிருக்கும் மக்களை நேரில் சந்தித்தார் பிரதமர் மோடி!

இமாச்சலப் பிரதேசத்தில் ஜூன் 27 முதல் ஆகஸ்ட் 9 வரை மழை தொடர்பான சம்பவங்களில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்றும், இந்த காலகட்டத்தில் சுமார் ரூ.842 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இமாச்சலப் பிரதேசத்தில் ஆகஸ்ட் 16 வரை கனமழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கையை மாநில வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.