தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான செய்திக்குறிப்பில், தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நாளை தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடலில் அது புயலாக வலுப்பெறக் கூடும் என கூறப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வரும் மே 11ஆம் தேதி வடக்கு வடமேற்கு திசையில் மத்திய கிழக்கு நோக்கி புயல் நகரக்கூடும் என்றும், அதன்பிறகு, இது படிப்படியாக மீண்டும் வடக்கு-வடகிழக்கு திசையில் வங்கதேசம்-மியான்மர் கடற்கரையை நோக்கி நகரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : ”மக்களின் பேராதரவு பாஜகவுக்கு இருக்கிறது; கர்நாடக தேர்தலில் வெற்றி நிச்சயம்” – மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
மேலும் தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 12 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.