அமிர்தசரஸ் பொற்கோயில் அருகே மீண்டும் குண்டு வெடிப்பு… பலர் காயம் என தகவல்..!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் அருகே உள்ள பாரம்பரிய தெருவில் இன்று காலை மீண்டும் குண்டு வெடித்ததில் பலர் காயமடைந்தனர். சீக்கியர்களின் புனித ஸ்தலமான பொற்கோவில் உள்ளது. இந்தியாவின் முக்கியமான சுற்றுலா ஸ்தலங்களில்…

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் அருகே உள்ள பாரம்பரிய தெருவில் இன்று காலை மீண்டும் குண்டு வெடித்ததில் பலர் காயமடைந்தனர்.

சீக்கியர்களின் புனித ஸ்தலமான பொற்கோவில் உள்ளது. இந்தியாவின் முக்கியமான சுற்றுலா ஸ்தலங்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது. சீக்கியர்கள் மட்டும் இன்றி அனைத்து மதத்தினரும் இதனை சுற்றுலா நோக்கில் பார்வையிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் இந்த பொற்கோவில் அருகில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக வெடிகுண்டு படை மற்றும் எஃப்.எஸ்.எல். குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடனடியாக விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இன்று காலை மீண்டும் அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே ஹெரிடேஜ் தெருவில் மீண்டும் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. அப்போது அருகில் உள்ள உணவகம் மற்றும் குடியிருப்பின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்ததாகவும், அவ்வழியாக சென்ற பாதசாரிகள் பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலால் பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

https://twitter.com/lawyer_Manish_G/status/1655472965214146560?s=20

இச்சம்பவம் குறித்து காவல்துறை தடயவியல் குழு விசாரணை மேற்கொண்டுள்ளது. விசாரணையில், கண்ணாடி உடைந்த ஜன்னல் அருகே சில தூள்களை மீட்டுள்ளது. அமிர்தசரஸ் போலீஸ் கமிஷனர் நௌனிஹால் சிங் கூறுகையில், அமிர்தசரஸ் குண்டுவெடிப்பு தொடர்பான செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளது. சம்பவம் குறித்த உண்மைகளை கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதால், யாரும் அச்சப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளார். மேலும்
அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுமாறு குடிமக்களை வலியுறுத்துவதாக கேட்டுக்கொண்டுள்ள அவர், இது தொடர்பான செய்திகளை பகிர்வதற்கு முன் உண்மைத்தன்மையை அறிந்து பகிருமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக, கரந்தீப் சிங் என்ற உள்ளூர்வாசி கூறுகையில், ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் இருந்து பொற்கோவிலில் தரிசனம் செய்வதற்காக சிறுமிகள் வந்துள்ளனர். ஆட்டோ ரிக்ஷாவில் பயணம் செய்து வந்த அந்த சிறுமிகள் குண்டு வெடித்ததில் கண்ணாடித் துண்டுகளால் தாக்கப்பட்டு சிறு காயங்களுக்கு ஆளானதாக தெரிவித்தார்.

https://twitter.com/cpamritsar/status/1655070099945193473?s=20

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.