கொட்டி தீர்த்த கனமழை… வெள்ளக்காடான சவுதி அரேபியா!

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்வதோடு கிழக்கு மாகணத்தில் அலங்கட்டி மழையும் பெய்து வருகிறது.

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் நகரங்கள் வெள்ளக் காடாய் காட்சியளிக்கின்றன. 

பாலைவன நாடான சவுதி அரேபியாவில் ஆண்டிற்கு 10 செ.மீ மழை பெய்வதே அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் பருவ நிலை மாற்றம் காரணமாக அங்கு சமீபத்தில் கனமழை வெளுத்து வாங்குகியது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பெய்த கன மழையால் சாலைகள் முழுவதும் ஆறுகள் போல காட்சியளித்தன.

குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.  கட்டிடங்கள், வாகனங்கள், சாலைகள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டதோடு ஓமனில் 21 பேரும் அரபு அமீரகத்தில் 4 பேரும் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை வெளுத்து வாங்கியது. கடந்த 2 நாட்களில் சவுதியில் 4.9 செ.மீ மழையும், ஜெட்டா நகரில் 3.8 செ.மீ மழையும் பெய்துள்ளது. மேலும் இந்த வாரம் முழுவதும் மிதமானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகணத்தில் ஆலங்கட்டி மழை மற்றும் துசியான காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மக்கள் பொது இடங்களுக்கு செல்ல கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் எச்சரிக்கயாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக விமான நிலையங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சவுதி அரேபியாவின் சில பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்வதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.