முக்கியச் செய்திகள் மழை

கோவையில் கனமழை; நீரில் சிக்கிக்கொண்ட வாகனங்கள்

கோவையில் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையில் பேருந்து மற்றும் கார்கள் மழை நீரில் சிக்கிக்கொண்டது. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தமிழ்நாட்டில், சென்னை உட்பட பல மாவட்டங்களில், பருவமழை கடந்த சில நாட்களாக பெய்து வந்தது, இந்நிலையில் நேற்று கோவை மாவட்டத்தில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையினால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், இடுப்பு அளவிற்கு தேங்கிய மழை நீரினால் வாகனத்தை ஓட்டி செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

தொடர் மழையின் காரணமாக போக்குவரத்து பாதித்ததோடு வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும், மழை நீரில் கார் மற்றும் பேருந்துகள் சிக்கிக்கொண்டது. இதனால், கோவை மாநகரில் போக்குவரத்து ஸ்தம்பித்ததோடு பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

Advertisement:
SHARE

Related posts

விரைவில் ஆட்டோமொபைல் நகரம்: அமைச்சர் முத்துசாமி

Halley Karthik

எதற்கும் துணிந்தவன் – புதிய அப்டேட்டை வெளியிட்டது படக்குழு

Saravana Kumar

தமிழகத்தில் முக்கிய தலைவர்கள் வாக்களித்தனர்!

Gayathri Venkatesan