சட்டப்பேரவையில் காவி நிறம் குறித்து காரசார விவாதம்!

தமிழக சட்டப்பேரவையில் அமைச்சரவை கொள்கை விளக்கப் புத்தகத்தின் அட்டைப்பட நிறம் குறித்து சுவாரசியமான காரசார விவாதம் நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் பேரவையில் சுற்றுலாதுறை சார்பில் அறிவிப்புகளை வெளியிட்டார். அப்பொழுது அறிவிப்பு புத்தகத்தில் பஜகவின் காவி வண்ணத்தில் இருப்பதாக திமுகவினர் சுட்டிக்காட்டினர்.

இதுகுறித்து பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவராக இருக்கிறார் ஆனால் அறிவிப்பு புத்தகங்கள் காவி நிறத்தில் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்றார்.

இதற்கு உடனடியாக பதிலளித்த பொதுபணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அவர் தேசியக் கொடியில் இருக்கும் காவி வண்ணத்தைத்தான் பயன்படுத்தி இருக்கிறார். அதில் எந்த அர்த்தமும் கிடையாது. காங்கிரஸ் என்றால் தேசியக்கொடி வண்ணம் தான், அதில் இருக்கும் முதல் வண்ணமான ஆரஞ் வண்ணத்தைதான் அறிவிப்புகளில் பதிவிட்டுள்ளார் என்றார்.

இதனைத்தொடர்ந்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. கலாச்சாரத்தில் வர்ணம் இல்லை, மொழி இல்லை தமிழ் இல்லை எல்லாவற்றிலும் ஒற்றுமையை எதிர்பார்ப்பதுதான் காங்கிரஸ் பேரியக்கம் வேற்றுமையை பார்ப்பது காங்கிரஸ் கிடையாது காங்கிரஸ் வர்ணம் பார்ப்பது கிடையாது. இதை திட்டமிட்டு திமுக பரப்புவதாக நான் கருதுகிறேன்.” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.