திருமாவளவனை முதல்வராக்க மறுத்தார்… நான்தான் முதல்வராக இருப்பேன் என்றார் இபிஎஸ் – சி.வி. சண்முகம் பரபரப்பு பேட்டி!

தனது பலவீனத்தை மறைக்க தவறான தகவலை எடப்பாடி பழனிசாமி சொல்கிறார் என்று சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

சென்னை எம்.ஆர்.சி நகரில் அதிமுக எம்.எல்.ஏ சிவி சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசியவர், “எம்எல்ஏக்கள் தன்னை சட்டப்பேரவைக் குழுத் தலைவராக நியமித்ததாக எடப்பாடி பழனிசாமி கூறியது தவறு. எம்எல்ஏக்கள் கூட்டம் எங்கு நடந்தது? எப்போது நடந்தது? 47 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட இபிஎஸ் அளித்த கடிதம் போலியானது. கையெழுத்து போலியானது. புதுச்சேரியில் எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டபோது இபிஎஸ் எங்களிடம் என்ன சொன்னார்? ‘நான் மேலே பேசிவிட்டேன், அவர்கள் ஓகே சொல்லிவிட்டனர். நான் முதல்வராக ஆகப் போகிறேன். திமுக வெளியில் இருந்து ஆதரவு தரப்போகிறது’ என்று கூறினார். புதுவையில் என்ன பேசினார் என்று இபிஎஸ் வெளிப்படையாகச் சொல்லத் தயாரா?

எம்எல்ஏக்கள்தான் கொறடா, சட்டப்பேரவைக் குழுத் தலைவரை தேர்வு செய்ய வேண்டும். அதன்படி, பெரும்பான்மை எம்எல்ஏக்களாகிய நாங்கள் தேர்வு செய்த கொறடா, சட்டப்பேரவைக் குழுத் தலைவர் அடங்கிய கடிதத்தை நாங்கள் பேரவைத் தலைவரிடம் அளித்திருக்கிறோம். இரண்டு கடிதங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறோம். திருமாவளவனை முதல்வராக்க முயற்சி நடைபெற்றது. திருமாவளவன் மட்டும் முதல்வர், மற்ற அமைச்சர்கள் அனைவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்று திமுக கூறியது. ஆனால் முதல்வராகத் தான் இருப்பேன் என்று இபிஎஸ் கூறிவிட்டார். 47 தொகுதிகள் வெற்றி பெற்றதை மிகப்பெரிய வெற்றி என்று இபிஎஸ் கூறுகிறார். அவர் எல்லாம் பொதுச் செயலாளரா? தோல்விக்கு பொறுப்பேற்க இபிஎஸ் மறுக்கிறார்”. திமுகவுடன் கூட்டணி, பாஜகவும் ஆதரவு அளித்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.

திமுகவின் எதிர்ப்பு அடிப்படையிலேயே தவெகவுக்கு ஆதரவு அளிக்கிறோம். யாருக்கு பதவி ஆசை என்பதை எடப்பாடி பழனிசாமி மனசாட்சியைத் தொட்டு சொல்ல வேண்டும். கட்சியில் எந்தப் பிளவும் இல்லை. ரிசல்ட் அன்று வெற்றிச்சான்றிதழ் வாங்கிய உடன் 2 திமுக முன்னாள் அமைச்சர்கள் என் லைனுக்கு வந்து என்னென்னமோ பேசினார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால் மறுநாள் காலையில்தான் ஈபிஎஸ் ஆட்சியமைக்க போகிறோம். திமுக ஆதரவு கொடுக்கும் என சொன்னார். அப்போதுதான் எனக்கு புரிந்தது. அந்த 2 முன்னாள் அமைச்சர்கள் யாரென்று கேட்காதீர்கள்.

நான் சொல்ல மாட்டேன் பெரும்பான்மை எம்.எல்.ஏக்களின் சட்டமன்றக்குழு தலைவர் எஸ்.பி வேலுமணிதான். சட்டமன்றத்தின் நிர்வாகத்தில் அரசியல் கட்சிகளின் உத்தரவு செல்லாது எடப்பாடி பழனிசாமி கொடுத்து இருப்பது போலிக்கடிதம். எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்துதான் கொறடாவை நியமிக்க முடியும். பொதுச்செயலாளர் கொறடாவை நியமிக்க முடியாது” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.