அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தம்மீது வழக்குகள் தொடரப்படுகிறது; எஸ்.பி.வேலுமணி

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தம்மீது வழக்குகள் தொடரப்படுவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். கோவையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தம்மீது வழக்குகள் தொடரப்படுவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசு பொறுப்பேற்றதை அடுத்து, கோவையில் சாலைப்பணிகள் உட்பட 300 பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி,

சென்னையில் மழை, வெள்ளத்திற்கு முன் போடப்பட்ட சாலைகள் இன்னும் சேதமடையாமல் இருப்பதாகவும், 2 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தூரத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளபட்டதாகவும், அரசை விமர்சனம் செய்வதாலேயே,

எடப்பாடி பழனிசாமியை, கோடநாடு வழக்கில் சிக்க வைக்க பார்ப்பதாகவும், உள்ளாட்சித் தேர்தலில் தாம் இருக்கக் கூடாது என்பதற்காக தம்மீது வழக்குகள் தொடரப்படுவதாகவும், கோவையில், நிலுவையில் உள்ள மக்களின் பிரச்சினைக்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் இல்லையென்றால், தமிழ்நாடு அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவம் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.