முக்கியச் செய்திகள் குற்றம்

சிறுமியிடம் பாலியல் தொந்தரவு; இரண்டு இளைஞர்கள் போக்சோவில் கைது

சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக இரண்டு இளைஞர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுகுறித்து நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்த காணெளியில் “குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும் அதைத் தொடர்ந்து அவர்கள் தற்கொலை செய்து கொள்வதுமான செய்தியைக் கேள்விப்படும் போது அவமானமாக இருக்கிறது என்றும்,

பாலியல் தொல்லைகள், சீண்டல்கள் குறித்த புகார்கள் வந்ததும் உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நீங்களே கடந்த சில நாட்களாக அதனைச் செய்திகளில் பார்த்துக்கொண்டு வருகிறீர்கள். உண்மைக் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுத் தர இந்த அரசு தயங்காது!” என சொல்லி இருந்தார்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த ஜேசிபி ஆப்பரேட்டர் விஜய்(23) என்ற இளைஞர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

இதேபோல், ஓசூரை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த மேஸ்திரி விவேக்(23) என்பவரை ஒசூர் மகளிர் நிலைய போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

ஒமிக்ரான் ஊரடங்கு: 31-ஆம் தேதி ஆலோசனை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Arivazhagan CM

ஃபோர்டு நிறுவனம் இப்போது மூடப்படவில்லை : அமைச்சர் தா.மோ.அன்பரசன்

Ezhilarasan

”கூட்டணி கட்சிகளை நம்பி அதிமுக இல்லை”- அமைச்சர் செல்லூர் ராஜூ!

Jayapriya