முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் திருப்தி: சென்னை உயர் நீதிமன்றம்!

தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் திருப்தி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, தாமாக முன் வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில், தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 650 டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொள்ளும் பணிகளில் தமிழக அரசுக்கு உதவியாக நீதிமன்றம் செயல்படும் எனவும், தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

கொரோனாவில் குணமடைவோர் ஒருபுறம் அதிகரிப்பது மகிழ்ச்சி அளித்தாலும், இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என்று தெரிவித்த நீதிபதிகள் கொரோனாவில் பலியானவர்களின் முகங்களை உறவினர்கள் பார்க்கும் வகையில் வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டனர்.

Advertisement:

Related posts

மதுபான விற்பனைக்கு அனுமதி ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி!

மகா சிவராத்திரி விழாவில் பிரசாதத்தை உண்ட 70 பேர் மருத்துவமனையில் அனுமதி!

Gayathri Venkatesan

சிவகாசியில் மீண்டும் பட்டாசு ஆலை வெடி விபத்து!

Niruban Chakkaaravarthi