கர்நாடாகாவில் கடந்த 2023 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அப்போது, சித்தராமையா முதலமைச்சராகவும், டிகே சிவகுமார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர். மேலும் இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி வழங்க காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சித்தராமையா முதல்மந்திரியாக பொறுப்பேற்று 3 ஆண்டுகள் ஆன நிலையில், டி.கே.சிவகுமாருக்கு அந்த பதவியை வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து டெல்லியில் நேற்று முன்தினம் மாலை காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் முதல்வர் மாற்ற விவகாரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சித்தராமையா, டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனையடுத்து திடீர் திருப்பமாக கர்நாடக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக சித்தராமையா அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளுனர் மாளிகைக்கு சென்ற சித்தராமையா தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் மாளிகையில் உள்ள செயலாளரிடம் வழங்கினார். புதிய முதலமைச்சராக தற்போதைய துணை முதலமைச்சர் டி. கே. சிவகுமார் பொறுப்பேற்க உள்ளார்.







