முக்கியச் செய்திகள் சினிமா

பிரபல நடிகருக்கு ’ஆஞ்சியோ பிளாஸ்டி’ சிகிச்சை!

பிரபல நடிகரும் இயக்குநருமான அனுராக் காஷ்யப்பிற்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டுள் ளது.

தமிழில், நயன்தாரா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாக நடித்தவர் அனுராக் காஷ்யப். பிரபல இந்தி இயக்குநரான இவர், ’பிளாக் பிரைடே’, ‘தேவ் டி’, ‘கேங்ஸ் ஆப் வசிப்பூர்’, ’மன்மர்ஸியான்’ உள்பட சில படங்களை இயக்கி இருக்கிறார். சில படங்களை தயாரித்தும் உள்ள இவர், பல இந்தி படங்களில் நடித்துள்ளார்.

இவர் இப்போது டாப்ஸி நடிக்கும் டோபாரா (Dobaara) என்ற படத்தை இயக்கியுள்ளார். இதன் ஷூட்டிங் மார்ச் மாதம் முடிவடைந்தது. அதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை தனது வீட்டில் இருந்தே செய்து வருகிறார், அனுராக். இந்நிலையில் இவருக்கு கடந்த சில நாட்களுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ரத்தகுழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்ததையடுத்து ‘ஆஞ்சியோ பிளாஸ்டி’ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி அனுராக் காஷ்யபின் செய்தி தொடர்பாளர், ‘அனுராக் காஷ்யப்பிற்கு ‘ஆஞ்சியோ பிளாஸ்டி’ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது உண்மைதான். இப்போது அவர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இன்னும் சில வாரங்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டும். அதற்கு பிறகு பட வேலைகளில் கவனம் செலுத்துவார்’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பைக் கண்காணிக்கப் பாகுபாடற்ற குழு அமைக்கப்படும்- உச்சநீதிமன்றம்

Karthick

பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை!

Hamsa

அஞ்சல் மூலம் வீட்டுக்கே வரும் புதிய வாக்காளர் அட்டை!

Jeba