பெரம்பலூர் அருகே குரும்பலூரில் ஸ்ரீ ஆப்பூர் நல்லேந்திர சுவாமி திருக்கோயிலின் மாசிமக தேர் திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ஆப்பூர் நல்லேந்திர சுவாமி திருக்கோவிலின் மாசி மகம் திருத்தேர் திருவிழா வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது. கடந்த பிப்ரவரி 26ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியில் தொடங்கியது.
கடந்த மூன்று நாட்கள் சுவாமி வீதி உலா, காட்டு கோவிலில் பொங்கல் வைத்து மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தல் நிகழ்ச்சிகள் நடை பெற்றது. இதனை தொடர்ந்து இன்று திருத்தேர் திருவிழா கோலாகலமாக நடை பெற்றது.
விழாவினை கோவில் பூசாரிகள் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். செண்டை மேளம், மங்கள வாத்தியம், பறை இசை முழங்க ஸ்ரீ ஆப்பூர் நல்லேந்திர சுவாமி மற்றும் ஸ்ரீ நல்லதங்காள் சுவாமிகள் எழுந்தருளி வீதி உலா கொண்டு வந்தனர்.
பின்னர், தேர் குரும்பலூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தேரின் வடம் பிடித்து இழுத்தனர். ஊர் சுற்றி வந்த தேரை பக்தர்கள் அனைவரும் வணங்கி சாமி தரிசனம் செய்தனர்.




