“குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது?” – கனிமொழி

குழந்தைகளை வைத்து, ஆட்சிக்கு வந்த விஜய் மாமா எங்கே போனார் என்று திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பிறந்தநாள் கொண்டாடிவிட்டு உறங்கிய சிறுமி அடுத்த நாள் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து 10 நாட்களாக சிறுமியை தேடி வந்தனர். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லாததால் சிறுமி காணாமல் போன வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக சிபிசிஐடி இந்த் வழக்கை விசாரித்து வருகின்றனர். செஞ்சி சிறுமி காணாமல் போய் 14 நாட்களாகியும் சிறுமி குறித்த எந்த தகவலும் கிடைக்காமல் சிபிசிஐடி தினறி வருகின்றனர்.

இந்த நிலையில் குழந்தைகளை வைத்து, ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த விஜய் மாமா எங்கே போனார்? என்று திமுக நாடாளுமன்ற உறுபினர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “ செஞ்சியில் காணாமல் போன ஏழு வயதுச் சிறுமியை 14 நாட்களாகியும் கண்டுபிடிக்கவில்லை.

வேளாங்கண்ணிக்குச் சென்ற இரண்டு சிறுமிகளை விடுதியில் அடைத்துப் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள செய்தி நெஞ்சைப் பதறவைக்கிறது.
சாத்தான்குளத்தில் இரு சிறுமிகள் கடத்தப்பட்ட நிலையில், ஒரு சிறுவன் அறிவாளால் வெட்டுப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கோவையில் சாதிய வன்கொடுமையால் 11-ஆம் வகுப்பு மாணவர் உயிரை மாய்த்துக் கொண்டார் . மறுபுறம், கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்றுவந்த நான்கு வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இப்படி எல்லா வழிகளிலும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது. குழந்தைகளை வைத்து, ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த விஜய் மாமா எங்கே போனார்?

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.