சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுப்பெற்று நாளை (அக்.26) மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக மாறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இன்று மாலை 4 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி மற்றும் விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்களில் ஆங்காங்கே இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




