#Haryana | +2 மாணவனை 25 கி.மீ. துரத்திச் சென்று சுட்டுக் கொன்ற பசு காவலர்கள் – காரணம் என்ன?

ஹரியானாவில் பசுவைக் கடத்திச் சென்றதாக நினைத்து பள்ளி மாணவனை சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவில் கடந்த 27ஆம் தேதி புலம்பெயர் தொழிலாளி சபீர் மாலிக் என்பவர், மாட்டிறைச்சி சாப்பிடதற்காக…

#Haryana | +2 student for 25 km. Cow guards chased and shot dead - what was the reason?

ஹரியானாவில் பசுவைக் கடத்திச் சென்றதாக நினைத்து பள்ளி மாணவனை சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானாவில் கடந்த 27ஆம் தேதி புலம்பெயர் தொழிலாளி சபீர் மாலிக் என்பவர், மாட்டிறைச்சி சாப்பிடதற்காக 7 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டு, உயிரிழந்தார். இந்த கொலை சம்பவத்தில் 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பிறகு முன்னதாக இது போன்று நடந்த மற்றொரு சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாத்தை சேர்ந்தவர் ஆரியன் மிஸ்ரா(19). இவர் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த சூழலில் இவர் கடந்த 23ஆம் தேதி தனது நண்பர்களான ஹர்சித் மற்றும் சங்கியுடன் சாப்பிடுவதற்காக காரில் உணவகத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது, இவர்கள் பசுவைக் கடத்துவதாக சந்தேகம் எழுந்த நிலையில், பசுப் பாதுகாப்புக் குழுவினர் எனக் கூறப்படும் சிலர் காரை நிறுத்துமாறு கூறியுள்ளனர்.

ஆனால், அவர்கள் காரை நிறுத்தாமல் சென்றததை அடுத்து, பசுப் பாதுகாவலர்கள் சுமார் 25 கி.மீ. தூரம் காரை துரத்திச் சென்றனர். இந்த சூழலில், ஆரியனின் கார் பல்வால் என்ற பகுதியில் உள்ள சுங்கச்சாவடியின் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதனையடுத்து, பசுப் பாதுகாவலர்கள் அந்த காரின் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஆரியனின் நெஞ்சுப் பகுதியில் குண்டு பாய்ந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக பசுப் பாதுகாப்பு குழுவினர் எனக் கூறப்படும் அனில் கௌசிக், வருண், கிருஷ்ணா, ஆதேஷ் மற்றும் செளரவ் ஆகியோரை போலீசார் கைது செய்து, துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.