#StopHarassement – திருச்சியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த மருத்துவர் கைது!

திருச்சியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த மருத்துவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சியில் கடந்த 6 மாதகாலமாக, தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த…

#StopHarassement - Doctor arrested for sexually harassing schoolgirls in Trichy!

திருச்சியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த மருத்துவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சியில் கடந்த 6 மாதகாலமாக, தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவிகளுக்கு மருத்துவர் சாம்சன் (31) என்பவர் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இது தொடர்பாக புகார் எழுந்த நிலையில், தற்போது மருத்துவர் சாம்சன் மீது கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகள் உதவி எண் 1098ல் பெறப்பட்ட தகவலின் பேரில், திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப்பதிவை தொடர்ந்து மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாம்சனின் தாயார் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.