“குடியரசு தின வாழ்த்துக்கள்” – பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு !

குடியரசு தினவிழாவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாடு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 76வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தலைநகர் டெல்லியில் உள்ள கடமைப்பாதையில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். குடியரசு தினத்தையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள்வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தனது குடியரசு தின வாழ்த்து செய்தியை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “குடியரசு தின வாழ்த்துக்கள்.

இன்று, நாம் ஒரு குடியரசு நாடாக 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடுகிறோம். நமது அரசியலமைப்பை உருவாக்கி, நமது பயணம் ஜனநாயகம், கண்ணியம் மற்றும் ஒற்றுமையில் வேரூன்றியுள்ளது என்பதை உறுதி செய்துள்ள அனைத்து பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தலைவணங்குகிறோம். இந்த சந்தர்ப்பம் நமது அரசியலமைப்பின் இலட்சியங்களைப் பாதுகாப்பதற்கும், வலுவான மற்றும் வளமான இந்தியாவை நோக்கி உழைப்பதற்கும் நமது முயற்சிகளை வலுப்படுத்தட்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.