வடகுருஸ்தலம் என அழைக்கப்படும் சென்னை திருவொற்றியூர் குரு தட்சிணாமூர்த்தி திருக்கோவிலில் குரு பெயர்ச்சி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனூரை வடிவுடையம்மன் கோவிலுக்கு அருகாமையில் வடக்கு நோக்கி காட்சி கொடுக்கும் குரு பகவான் வேறு எங்கும் இதுபோன்று வடக்கு நோக்கி அமர்ந்ததில்லை.
வடகுரு ஸ்தலம் என்று அழைக்கப்படும் இத்திருக்கோவிலில் குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு இரவு எட்டு முப்பது மணி முதல் விசேஷ ஹோமங்கள் நடைபெற்றது. இதில் சிவாச்சாரியார்கள் பங்கேற்று வேதபராயணம் முழங்க கலசங்களை தலையில் ஏந்தி மேளதாளங்களுடன் கோவில் உட்ரகாரங்களில் ஒய்யாளி நடனமாடி வலம் வந்தனர்.
பின்னர் மகாபூர்ணாவதி நடைபெற்று குரு பகவான் நள்ளிரவு 11.27 மணியளவில் மீன
ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம்பெயர்ந்தார். இதனையடுத்து அபிஷேகங்கள் நிறைவு பெற்று குரு பகவானுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது.
பக்தர்களுக்கு லட்சார்ச்சனை மற்றும் பரிகார பூஜைகள் ஹோமங்கள் நடைபெற்று
பிரசாதங்களும் வழங்கப்பட்டன. நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
வெகு விமரிசையாக நடைபெறும் இந்த குரு பயிற்சி விழாவை காண்பதற்காக வெளி
மாவட்டங்களில் இருந்தும் புறநகர் பகுதிகளிலிருந்தும் சுமார் 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானை வழிபட்டனர்.







