முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது: அதிமுக வெளிநடப்பு!

இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர், இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், விசாரணை என்ற பெயரில் கட்சி நிர்வாகிகளை அழைத்து செல்கின்றனர். ஆனால், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது கிடையாது. எனவும், வெளி மாநிலத்தில் இருந்து டன் கணக்காக குட்கா போதைப் பொருட்கள் தமிழகத்தில் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் இளைஞர்கள் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம், கட்டப்பஞ்சாயத்து மீண்டும் தலைதூக்கியுள்ளதாக அவர் குற்றம்சாடினார். மேலும், ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சரியாக செயல்படாததால் சென்னை மாநகரம் வெள்ளத்தில் மூழ்கியதகவும், திமுக அரசு மழையால் பாதிக்கப்பட்ட சென்னை வாழ்மக்களுக்கு எந்த நிவாரணத் தொகையையும் வழங்க வில்லை என தெரிவித்தார்.

பொங்கலை சிறப்பாக கொண்டாட 2500 ரூபாய் அம்மா அரசு வழங்கியதாகவும், பொங்கல் பரிசு அளிக்காதது மக்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளதாகவும் அவர் வேதனைப்பட தெரிவித்தார். அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அம்மா மினி கிளினிக் திட்டத்தை திமுக அரசு மூடியது ஏழை மக்கள் மீது அக்கறை இல்லாத அரசு என்பதை காட்டுவதாக இருக்கிறது என தெரிவித்தார்.

அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் எல்லாம் அழிந்து போய் உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இதுவரை எந்த அதிகாரிகளையும் அரசு அனுப்பி வைக்கப்படவில்லை என தெரிவித்தார்.

மக்களை ஏமாற்றி வஞ்சகமாக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு, 13 லட்சம் பேருக்கு தான் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், 48 லட்சம் பேரில் 35 லட்சம் பேர் ஏமாந்து போய் நிற்பதாகவும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

“வேளாண் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் மக்களை ஏமாற்றும் செயல்” – பாஜக

Halley Karthik

ரூ.1 லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் திட்டம்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

Ezhilarasan

காவலர் தேர்வு மையத்தில் வினாத்தாளை படம் பிடித்து வாட்ஸ் அப்பில் அனுப்ப முயன்ற இருவர் கைது!

Jeba Arul Robinson