இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர், இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது போசிய அவர், அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்கிட, மாபெரும் திட்டம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறைகளில் தான் வடிவமைக்கப்படுகிறது என்பதை நமது அரசு நன்கு உணர்ந்துள்ளது. தாய்மொழிப் பற்றும், உலகை வெல்ல உதவும் ஆங்கிலமும், இணைந்த இரு மொழிக் கொள்கை அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்யும் என கூறிய அவர்,
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சமூக நீதிப் பார்வை, அறிவியல் வழி சிந்தனையையும் தொழில்முனையும் திறன் படைத்த இளைஞர் சமுதாயம், கலை, இலக்கியம், விளையாட்டு என பன்முகம் கொண்ட வெற்றியாளர்களை உருவாக்குவது இவற்றை முன்வைத்து செயலாற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
மேலும், இந்த உயரிய நோக்கங்களுக்கு செயல்வடிவம் தந்திடும் வகையில் மாநில கல்வி அமைப்பின் முதுகெலும்பாக திகழும் அரசுப் பள்ளிகளை நவீனமாக்க மாபெரும் திட்டம் அடுத்த ஐந்தாண்டுகளில் செயல்படுத்தப்படும் என கூறினார்.