சர்ச்சை சாமியார் அன்னபூரணி அரசு அம்மாவை கைது செய்யக் கோரிக்கை

சர்ச்சை சாமியார் அன்னபூரணி அரசு அம்மாவை கைது செய்யக் கோரி சென்னை மற்றும் செங்கல்பட்டில், புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக சமூக வலைதளப் பக்கங்களில் பேசு பொருளாகி உள்ளவர் அன்னபூரணி அரசு அம்மா.…

சர்ச்சை சாமியார் அன்னபூரணி அரசு அம்மாவை கைது செய்யக் கோரி சென்னை மற்றும் செங்கல்பட்டில், புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களாக சமூக வலைதளப் பக்கங்களில் பேசு பொருளாகி உள்ளவர் அன்னபூரணி அரசு அம்மா. இவர் தன்னை கடவுளின் அவதாரம் என்றும் ஆதிபராசக்தியின் மறுவுருவம் என்றும் பொய் பரப்புரை செய்து வருவதாக, தமிழ்நாடு இந்து சேவா சங் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், சர்ச்சை சாமியார் அன்னபூரணி அரசு அம்மாவை கைது செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி சார்பிலும் செங்கல்பட்டு மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரில் இந்து மத நம்பிக்கைகளையும், சடங்குகளையும் அவமானப்படுத்தும் விதமாக அன்னபூரணி அரசு அம்மா செயல்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.