திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை ஒன்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்தது. இச்சம்பவம் தமிழ் நாடு முழுவதும் அதிவலைகளை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் பிபின் மான்ஜி என்னும் வடமாநில இளைஞரை கைது செய்யபட்டுள்ளார்.
இந்த நிலையில் நடிகரும் மநீம தலைவர் கமல்ஹாசன் எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கும்மிடிப்பூண்டியில் மூன்று வயதும் நிரம்பாத பெண்குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதும் கொடூரமான காயங்களால் இறந்தே போனதும் மனித குலத்தையே தலைகுனியவைக்கும் அவலம்.
நாகரிகம் அடைந்த சமூகம்தானா நாம் என்கிற கேள்வியை முகத்திலறைந்தாற்போல் எழுப்புகிறது இந்த துயரச்சம்பவம்.
இனியொரு சம்பவம் இப்படி நடக்காதிருக்க தமிழ்நாடு அரசாங்கம் உடனடியாக செயலில் இறங்கியாக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.




