முக்கியச் செய்திகள் தமிழகம்

ரூ.25 கோடி மதிப்புள்ள பச்சை கல் லிங்கம் மீட்பு

500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பச்சை கல் லிங்கம் மற்றும் தொன்மை வாய்ந்த
நாகாபரணம் ஆகியவற்றை கடத்த முயன்ற  நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை பூந்தமல்லி அருகே தொன்மை வாய்ந்த பச்சை கல் லிங்கம் மற்றும் உலோக
நாகாபரணத்தை கடத்த இருப்பதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல்
கிடைத்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த தகவலின் அடிப்படையில் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீசார் சிலையை
வாங்குவது போன்று நாடகம் ஆடி கடத்தல்காரர்களிடம் பேச்சுவார்த்தை
நடத்தியுள்ளனர்.

அப்பொழுது இந்த சிலையின் மதிப்பு ரூ.25 கோடி என்பது தெரியாமல் சிலை
கடத்தல் காரர்கள் போலீசாரிடம் பேரம் பேசியுள்ளனர். பின்னர் அந்த சிலைகள் அனைத்தும் கடத்தல் சிலைகள் என்பதை உறுதி செய்த போலீசார் உடனடியாக கடத்தல்காரர்களை கைது செய்து சிலைகளை மீட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வெள்ளவேடு புது காலனியை சேர்ந்த பக்தவச்சலம் என்கிற பாலா மற்றும் புதுச்சத்திரம் கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்த பாக்யராஜ் ஆகியோர் என
தெரியவந்தது.

மேலும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பச்சைக்கல் லிங்கம் மற்றும்
உலோகத்தாலான நாகாபரணம் ஆகியவற்றை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்து இவர்கள் இரண்டு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சிலை மற்றும் நாகாபரணம் ஆகியவை 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனவும் தெரியவந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அக்‌ஷராஹாசனுடன் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற கமல்ஹாசன்!

Saravana

கோவை தெற்கில் கமல்ஹாசன் வெற்றிபெறமுடியாது: எல்.முருகன் பேச்சு

Jeba Arul Robinson

தனியார் நிறுவனம் தொடங்கி சாதனை படைத்த பிளஸ் 2 மாணவர்!

Jayapriya