ப.சிதம்பரத்திற்கு மாநிலங்களவை சீட்: கே.எஸ்.அழகிரி தகவல்

ப.சிதம்பரத்திற்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட் வழங்கப்படலாம் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் அலுவலகத்தை கே.எஸ்.அழகிரி இன்று  திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மாணவர் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்…

ப.சிதம்பரத்திற்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட் வழங்கப்படலாம் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் அலுவலகத்தை கே.எஸ்.அழகிரி இன்று  திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மாணவர் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அங்கு பேசிய கே.எஸ்.அழகிரி, காந்தி எந்த பொறுப்பிலும் கிடையாது. ஆனால் தலைவராக இருந்தார்.சமூக பிரச்னையில் பெரியார் பங்களிப்பை காங்கிரஸ் மறுத்துவிட முடியாது.களத்தில் இறங்கி பணியாற்றுங்கள், எளிமையாக இருங்கள் என்று அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, காங்கிரஸ் செயல்பட ஆரம்பித்தால் இந்தியாவில் காங்கிரஸ் போல் கட்சியே கிடையாது என்ற அளவில் ராஜஸ்தான் மாநாடு அமைந்தது.  உட்கட்சி ஜனநாயகம் காங்கிரஸ் கட்சியில் உள்ளது என்று குறிப்பிட்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் மோடி அரசு நடத்திய சிபிஐ சோதனை ஒரு பழிவாங்கும் நடவடிக்கை. எத்தனை முறை தான் சோதனை நடத்துவீர்கள். இது நேர்மையற்ற செயல். ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். என்ன சோதனை, சோதனையில் கிடைத்து என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மேலும், சிபிஐ சோதனை ஒரு கீழ்த்தரமான செயல் என்றும் குற்றம்சாட்டிய அழகிரி, “இன்னும் இரண்டு நாட்களில் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார். ப.சிதம்பரத்திற்கு ராஜ்யசபா எம்.பி பதவி கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.