தேசியகொடி வண்ணத்தில் சீர் கொண்டு வந்த தாய்மாமன்

கடையநல்லூர் பகுதியில் தேசியகொடி வண்ணத்தில் டாரஸ் லாரியில்  சீர்வரிசை கொண்டுவந்ததால் போக்குவரத்து பாதித்தது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட மேல கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி நர்மதா. இவர்களின் மகளான…

கடையநல்லூர் பகுதியில் தேசியகொடி வண்ணத்தில் டாரஸ் லாரியில்  சீர்வரிசை கொண்டுவந்ததால் போக்குவரத்து பாதித்தது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட மேல கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி நர்மதா. இவர்களின் மகளான ஹன்சிகாவிற்கு மஞ்சள் நீராட்டு விழா நேற்று கடையநல்லூர் பகுதியில் நடைபெற்றது. விழாவிற்கு ஏராளமான உறவினர்கள் கலந்து கொண்டனர்.

அப்பொழுது, 100 வாகனங்கள் புடைசூழ ஒரு டாரஸ் லாரி ஒன்று வந்தது. ஆரஞ்சு வெள்ளை பச்சை நிற பலூன்களால் தேசியக்கொடி போன்று அலங்கரிக்கப்பட்ட அந்த டாரஸ் லாரியை சுதந்திர தின அணிவகுப்பு என்று நினைத்து அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.ஆனால் டாரஸ் லாரியின் உட்பக்கத்தில் சீர்வரிசை பொருள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்ட பொதுமக்கள் வியப்பில் ஆழ்ந்தனர் .

மஞ்சல் நீராட்டு விழாவிற்காக வந்த செல்வி ஹன்சிகாவின் தாய்மாமன் மற்றும் அவரது உறவினர்கள் டாரஸ் வாகனத்தில் மூவண்ணகொடி நிறத்தில் அலங்கரித்து கொண்டுவரப்பட்ட சீர்வரிசைகளை எடுத்துக்கொண்டு பூப்புனித நன்னீராட்டு விழா நடைபெற்ற மண்டபத்திற்கு அருகாமையில் உள்ள சாலைகளில் ஊர்வலமாகச் சென்றனர்.

100 வாகனங்கள் புடைசூழ வந்த இந்த ஊர்வலத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்திற்கு உள்ளானபோதும் தனது தங்கை மகளுக்காக மாமன் டாரஸ் லாரியில் சீர்வரிசை கொண்டு வந்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.