ஃபிஜியில் தடுப்பூசி செலுத்துக்கொள்ளாத அரசு ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என அந்நாட்டு பிரதமர் பிராங்க் பைனிமராமா தெரிவித்துள்ளார்.
தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஃபிஜி நாட்டில் டெல்டா கொரோனா வைரஸால் தினந்தோறும் 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் பொதுமக்களை தடுப்பூசி எடுக்க வைக்கும் நோக்கில், அந்நாட்டு அந்நாட்டு பிதமர் பிராங்க் பைனிமராமா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, அரசு ஊழியர்கள் வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதிக்குளும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் வரும் 1ஆம் தேதிக்குள் எடுத்திருக்க வேண்டும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டாவது டோஸை வரும் நவம்பர் 1ஆம் தேதிக்குள் செலுத்திருக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் ஊழியர்கள் கட்டாயை விடுப்பு முதல் பணி நீக்கம் வரை செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தனியார் நிறுவன பணியாளர்கள் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள தவறினால், சம்பந்தப்பட்ட நிறுவனம் மூடப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.







