தென் கொரியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
தென் கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,316 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 80% சதவீத பாதிப்பு தலைநகரம் சியோலில் மற்றும் அதன் சுற்றுவட்டாற பகுதிகளில் பாதிவாகியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து இரண்டாவது நாளாக தொற்று எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் ஜுலை மாதம் இறுத்திக்குள் தொற்று பரவல் மேலும் அதிகரிக்கும் என சுகாதாராத்துறை எச்சரிக்கை விடுத்தனர்.
இதனால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு நாட்டில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கி அந்நாட்டு பிரதமர் கிம் உத்தரவிட்டுள்ளார். இந்த கட்டுப்பாடுகள் வரும் திங்கள்கிழமையில் இருந்து அமலுக்கு வருகிறது.