ஆளுநர்களுக்கு காது இருக்கிறதா? வாய் இருக்கிறதா? என்பது எனக்கு தெரியாது. ஆனால் ஆளுநர்களுக்கு இதயம் உள்ளது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை கே.கே நகரில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் அவசர மருத்துவ பிரிவு மையத்தை தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன் துவங்கி வைத்தார்.
மேலும், மருத்துவமனையில் சர்வதேச மகளிர் தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்று மேடையில் பேசியதாவது : எனக்கும் இஎஸ்ஐசி மருத்துவமனைக்கும் 30 ஆண்டுகள் தொடர்பு இருக்கிறது. இந்த மருத்துவமனையை ஆளாக்கிய ஆட்களில் நானும் இருக்கிறேன் மருத்துவமனைகள் செங்கல்களால் கட்டப்படவில்லை இதயங்களால் கட்டப்படுகின்றன.
தமிழால் முடியும் ஆகிய காரணத்தினால்தான் இந்திய பிரதமர் மருத்துவக் கல்வி தமிழில் பயிலலாம் என்று அறிவுறுத்தியுள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனைகள் காலதாமதம் ஆகிறது என்பது பிரச்சனை இல்லை. பிரம்மாண்டமான மருத்துவமனைகள் அமைவதற்க்கு கால தாமதம் ஆகிறது.
அண்மைச் செய்தி : மலேசியாவின் முன்னாள் பிரதமர் முகைதின் யாசின் கைது
ஆளுநர்களுக்கு காது இருக்கிறதா வாய் இருக்கிறதா என்பது எனக்கு தெரியாது ஆனால் ஆளுநர்களுக்கு இதயம் உள்ளது. செவிலியர்களால் தான் நல்ல மருத்துவர்கள் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறோம். இவ்வாறு தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.







