நீலகிரியில் நிலவும் கடும் வறட்சி; குப்பைத்தொட்டியிலிருந்து உணவை தேடி சாப்பிட்ட கரடி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நிலவும் கடும் வறட்சியினால் உணவைத் தேடி ஊருக்குள் புகுந்த கரடி சாலையோரம் குப்பைத்தொட்டியில் கொட்டப்பட்ட உணவுக் கழிவுகளை சாப்பிட்டு சென்றது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வனப்பகுதியில் கரடி,மான்,குரங்கு உள்ளிட்ட ஏராளமான…

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நிலவும் கடும் வறட்சியினால் உணவைத் தேடி ஊருக்குள் புகுந்த கரடி சாலையோரம் குப்பைத்தொட்டியில் கொட்டப்பட்ட உணவுக் கழிவுகளை சாப்பிட்டு சென்றது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வனப்பகுதியில் கரடி,மான்,குரங்கு உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன.நீலகிரியில் நிலவும் வறட்சியின் காரணமாக வன விலங்குகள் அவ்வப்போது நீர் மற்றும் உணவைத் தேடி ஊருக்குள் வருவது தொடர்கதையாக உள்ளது.

குறிப்பாக அண்மைகாலங்களாக உணவைத் தேடி ஊருக்குள் வரும் கரடிகள் பொதுமக்களை தாக்கும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறுகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கரடி ஒன்று கோத்தகிரி பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் உலா வருகின்றது.

நேற்று கேசலடா பகுதியில் உலா வந்த கரடி சாலையோரம் இருந்த குப்பைத்தொட்டியில் இறங்கி அதில் கொட்டப்பட்டிருந்த உணவுக் கழிவுகளை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது.இதனை அப்பகுதி வழியாக காரில் சென்றவர்கள் பார்த்து
கரடியை விரட்ட முயன்றும் எவ்வித சலனமும் இன்றி கரடி சாப்பிட்டுக் கொண்டிருந்தது.

பகல் மற்றும் இரவு நேரங்களில் கரடியின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.எனவே கரடியை கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து
அடர்ந்த வனப் பகுதிக்குள் சென்று கொண்டு விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

-வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.