மகளிர் பிரீமியர் கிரிக்கெட் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 106 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
மகளிரி பிரீமியர் லீக் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி ஆடி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. டெல்லி அணியில் மேக் லேனிங்வும் ஷபாலி வர்மாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். மேக் லேனிங் 43 ரன்கள் அடித்தார். ஷபாலி வர்மா 2 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்தெடுத்த அலைஸ் கேப்சி, மாரிஜேன் கேப் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஜெமியாஹ் ரோட்ரிஹ்யூஸ் 25 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் பெரிதாக ரன் ஏதும் எடுக்கவில்லை. 18 ஓவர்களிலேயே டெல்லி கேபிடல்ஸ் அணி 105 ரன்கள் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் சாய்கா இஷாஹூ 3 விக்கெட்டுகளையும் இசி வோங் 3 விக்கெட்டுகளையும் ஹேய்லே மேத்யூவ்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி ஆடி வருகிறது.