முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அரசு பேருந்தில் பயணம் செய்த ஆளுநர் தமிழிசை!

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தமிழிசை சவுந்தர ராஜன், பொதுமக்களுடன் பேருந்தில் பயணம் செய்து, சாலைகளின் தரம் குறித்து கேட்டறிந்தார்.

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து தமிழிசை சவுந்தர ராஜன் குறைகளை கேட்டு வருகிறார். அரசின் திட்டங்கள் குறித்தும் அவ்வப்போது அவர் ஆய்வும் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் இன்று தனியார் பேருந்து ஒன்றில் பயணிகளோடு தமிழிசை பயணம் மேற்கொண்டார். அப்போது பயணிகளிடம், புதுச்சேரியில் உள்ள முக்கிய சாலைகள் எவ்வாறு இருக்கின்றன என்றும், பழுதாக உள்ளதா என்றும், சரியான நிலையில் உள்ளதா என்றும் கேட்டறிந்தார்.

Advertisement:

Related posts

தேர்தலுக்குப் பிறகு மும்முனை மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது: பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு!

Ezhilarasan

“நாம் தமிழர் வென்றால் அது புரட்சி” – சீமான்

Saravana Kumar

நாளை ரம்ஜான் பண்டிகை!

Jeba