முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சட்டம்

வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு!

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில், தமிழகத்தில் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு, பணிகளை தொடங்குவதற்கு முன்பு சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் வாதாடினார்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் 10.5 சதவீதமான, 50 சதவீதத்தை வன்னியர்களுக்கு கொடுத்துவிட்டால் மீதம் உள்ள சாதியினர் பாதிக்கப்படுவர் என்பதால் சட்டத்தை அமல்படுத்த தடைவிதிக்க வேண்டும் எனக் கோரினார்.

இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், போதுமான ஆதாரங்கள் இல்லாததால் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி, மனுவுக்கு ஆறு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

Advertisement:

Related posts

அதிமுக பாஜகாவை மக்கள் ஏற்றுகொள்ள மாட்டார்கள் : காதர்பாட்சா முத்துராமலிங்கம்!

Ezhilarasan

ஊழலற்ற ஆட்சி அமைய சரியான தலைமை வேண்டும்: கமல்ஹாசன்

எல்.ரேணுகாதேவி

மமதாவின் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம்!

Sathis Sekar