ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவதை தவிர ஆளுநருக்கு வேறு வாய்ப்பு இல்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஆன்லைன் ரம்மி சூதாட்டம் குறித்து ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எந்தவிதமான திருத்தமும் செய்யாமல் மீண்டும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு சட்டம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ஒப்புதல் அளிப்பதை தவிர வேறு எந்த வாய்ப்பும் ஆளுநருக்கு இல்லை. அரசியலமைப்புச் சட்டப்படி ஒப்புதல் வழங்க வேண்டும். ஆளுநர் ஆளுநர் ஒப்புதல் வழங்குவார் என்று நம்பிக்கை உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் இன்று திருச்சியில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் ஒருவர் இறந்த விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்கும். தற்போது இருக்கின்ற சட்டத்தை வைத்து ஓரளவுக்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு யார் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும் என்று கூறினார்.
சாந்தன், முருகன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்ட பிறகும் திருச்சி சிறையில் உள்ள
இலங்கை முகாமில் உள்ளனர். அவர்கள் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு என்ன
நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை குறித்த கேட்ட கேள்விக்கு பதில் அளித்த
அமைச்சர், உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி தான் ஒவ்வொருவரும் விடுதலை செய்யப்பட்டனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பு படி அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றத்தில் விரைவில் தமிழ் வழக்காடு முறையாக வரும் என்று மத்திய அமைச்சர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்த செய்தி தமிழ் மக்களுக்கு ஒரு இனிப்பான செய்தி ஆகும் என்று கூறினார்.