முக்கியச் செய்திகள் சினிமா

சாயிஷாவின் கலக்கலான நடனத்தில் வெளியான ’ராவடி’ பாடல் -உற்சாகத்தில் சிம்பு ரசிகர்கள்!

நடிகை சாயிஷாவின் கலக்கலான நடனத்தில் உருவாகியிருக்கும் ’ராவடி’ பாடல், தற்போது இணையத்தில் வைராலாகி வருகிறது. 

பத்து தல படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா பத்து தல படத்தை இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் பத்து தல திரைப்படம் தற்போது சென்சார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தில் அதிக சண்டைக் காட்சிகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 32 நிமிடம் எனவும் தகவல் வந்துள்ளதாகவும், சென்சார் காப்பியில் இந்தப் படத்தைப் பார்த்த தயாரிப்பாளர், முதல் பாதியை விடவும் இரண்டாம் பாதி தாறுமாறாக இருப்பதாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து இதுபோன்ற பாசிட்டிவான ரிப்போர்ட்ஸ் வருவதால் சிம்பு ரசிகர்கள் இப்படமும் ஹிட் படமாக அமையும் என்ற நம்பிக்கையில் இருப்பதோடு படத்தின் வெற்றியை இப்போதே கொண்டாடி வருகின்றனர்.

படத்தின் பத்து தல ப்ரோமோஷன் பணிகள் தீவிரம் எடுத்து வருகிறது. ‘பத்து தல’ திரைப்படம் வரும் 30-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், இன்று இப்படத்தின் ’ராவடி’ என்ற பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகை சாயிஷாவின் கலக்கலான நடனத்தில் உருவாகியிருக்கும் ’ராவடி’ பாடல், தற்போது இணையத்தில் வைராலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சாத்தூர் பட்டாசு வெடி விபத்து; 2 பேர் மீது வழக்குப் பதிவு

Jayasheeba

27 மாவட்டங்களில் பேருந்து சேவை: பொதுமக்கள் மகிழ்ச்சி

EZHILARASAN D

ஒலிம்பிக்கில் 2 முறை தங்கம் வென்றவரை வீழ்த்திய இந்திய வீரர்

Gayathri Venkatesan