ஓமலூரில் மாநில அளவிலான மினி சாப்ட் டென்னிஸ் போட்டிகள் இன்று தொடங்கியது.
சேலம் மாவட்டம், ஓமலூரில் சாப்ட் டென்னிஸ் அகாடமி செயல்பட்டு
வருகிறது. இந்த அகாடமி சார்பில் கிராமப்புற மாணவர்களுக்கு சாப்ட் டென்னிஸ்
பயிற்சிகள் அளித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி குழந்தைகளுக்கான சாப்ட்
டென்னிஸ் போட்டிகள் இன்று துவங்கியது.
சேலம் மாவட்ட சாப்ட் டென்னிஸ் சங்கம் சார்பில் மாநில அளவில் மினி சாப்ட் டென்னிஸ் போட்டியில் 8 ,10 மற்றும்13 வயதினருக்கன போட்டிகள் நடத்தப்பட்டன. இதேபோன்று, சிறுமிகளுக்கான போட்டிகளும் நடை பெற்றது. இதில், சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், வேலூர், கரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 23 மாவட்டங்களில் இருந்து சிறுவர்கள் 181 பேர் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நாளை நடைபெறும் சிறுமிகளுக்கான போட்டியில் 100 பேர் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெரும் மாணவ மாணவிகளுக்கு அடுத்த கட்டமாக மாநில அளவிலான போட்டியிலும், தேசிய அளவிலான போட்டியிலும் கலந்து கொண்டு விளையாடுவார்கள். மேலும், சாப்ட் டென்னிஸ் விளையாட்டு போட்டி கிராமப்புற மாணவர்கள் விளையாட்டு வீரர்களுக்கு தெரியாமல் இருப்பதால், சாப்ட் டென்னிஸ் விளையாட்டுக்கான ஆர்வத்தையும், விளையாட்டு வீரர்களை அதிகளவில் உருவாக்கவும், சிறுவர்களுக்காக நடத்தப்பட்டு வருகிறது.
ம. ஸ்ரீ மரகதம்