சிறுமிகளுக்கு கன்னித்தன்மை சோதனை தொடர்பாக ஆளுநர் புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அனுப்ப தலைமைச் செயலாளருக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆங்கில நாளிதழுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த பேட்டியில், அறநிலையத்துறையின் கீழ் இல்லாத தில்லை நடராஜர் கோயிலில் குழந்தை திருமணங்கள் நடைபெற்றதாக புகார் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் அது போன்று எதுவும் நடக்கவில்லை என கூறியிருந்தார்.
மேலும் சிறுமியர்களை அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக கன்னித்தன்மை சோதனை செய்ததாகவும், இது தொடர்பாக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியதாகவும் தெரிவித்து இருந்தார்.
இதையும் படியுங்கள் : மதுரை சித்திரை திருவிழா : வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்; தண்ணீரை பீய்ச்சியடித்து பக்தர்கள் கொண்டாட்டம்
ஆளுநரின் கருத்து தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு தேசிய குழந்தைகள் நல ஆணையம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது. ஆளுநரின் புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை 7 நாட்களுக்குள் அனுப்புமாறு தலைமைச் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.







