முக்கியச் செய்திகள் தமிழகம்

மாணவ, மாணவிகளுக்கு அரசு உறுதுணையாக இருக்கும்: அமைச்சர் கே.என்.நேரு

மாணவ, மாணவிகளுக்கு அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு 2022ஆம் ஆண்டிற்கான இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின் மூலம், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் படி சேலம் மாவட்டத்தில் 31,351 மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதற்கான தொடக்க விழா சேலத்தில் இன்று நடைபெற்றது. அதில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேர, மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய அமைச்சர் கே.என்.நேரு, “கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, ஆரம்பப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும்,நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தி கொடுத்தார். ஆண்டுக்கு நூறு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டது. அவரைப் போலவே நமது தற்போதைய முதலமைச்சராகவும் பள்ளிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றி தர நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆயிரக்கணக்கான புது வகுப்பறைகளை கட்ட நிதி ஒதுக்கீடும் செய்துள்ளார்” என்றார்.

மேலும், தமிழகத்தில் சிவில் சர்வீஸ் தேர்வில் 93 பேர் தேர்வாகியுள்ளனர்.இவர்களில் 9 பேர் மட்டுமே ஆண்கள் மற்ற அனைவரும் பெண்கள் என தெரிவித்தார். இது நல்ல முன்னேற்றமாக உள்ளது. மாணவ மாணவிகளுக்கு இந்த அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என நிகழ்சியில் கே.என்.நேரு தெரிவித்தா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆட்டோவில் பரப்புரை மேற்கொண்ட கமல்; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

G SaravanaKumar

மணீஷ் சிசோடியாவை ஜாமீன் மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

Web Editor

கோத்தகிரியில் கடும் பனிப்பொழிவு – தேயிலைச் செடிகள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனை

Web Editor