முக்கியச் செய்திகள் தமிழகம்

சொத்துவரி விவகாரம்; அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

தமிழ்நாட்டில் 7% மக்களுக்குத்தான் 100 முதல் 150% வரை சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மத்திய அரசால் அமைக்கப்பட்ட நிதி ஆணையம், மானியம் பெறுவதற்கான தகுதியைப் பெற ஆண்டுதோறும் சொத்து வரி விகிதத்தை உயர்த்த கூறியுள்ளதாக விளக்கம் அளித்தார்.

அண்மைச் செய்தி: ‘கோலாகலமாக தொடங்கியது சித்திரைத் திருவிழா’

ஏழைகளுக்கு குறைவாகவும், வசதி படைத்தவர்களுக்கு அதிகமாகவும் வரி விதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், பொருளாதார அடிப்படையில் கணக்கிடும்போது 83 புள்ளி 1 8 சதவீத மக்களை சொத்து வரி உயர்வு பாதிக்காது என தெரிவித்தார். அதிமுக அரசு 2018ஆம் ஆண்டு ஒரேயடியாக வரியை உயர்த்தியதாகவும், அப்போது, தேர்தல் வந்த காரணத்தால் அதனை நிறுத்திவைத்ததாகவும் அமைச்சர் கே.என்.நேரு விமர்சித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Advertisement:
SHARE

Related posts

தேர் விபத்து; உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் நிவாரணம்

Arivazhagan CM

கொரோனா உயிரிழப்புகள்; மத்திய அரசு எந்தவித பொறுப்பும் ஏற்கவில்லை: ராகுல்காந்தி!

Ezhilarasan

தேனியில் 5 பேர் டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதி!

Gayathri Venkatesan