உள்நாட்டில் தங்க உற்பத்திக்கு அரசு ஆதரவு?

தங்கம் விலை உயர்வு அனைவரையும் கவலையடைய வைக்கிறது. இந்நிலையில் உள்நாட்டில் தங்கம் உற்பத்திக்கு அரசு ஆதரவு என்ற மகிழ்ச்சியான செய்தியை பார்க்கலாம் தங்கத்தை விரும்பாத மங்கை உலகில் இல்லை. மக்களும் அரசாங்கங்களும் தங்கத்தை நிலையான…

தங்கம் விலை உயர்வு அனைவரையும் கவலையடைய வைக்கிறது. இந்நிலையில் உள்நாட்டில் தங்கம் உற்பத்திக்கு அரசு ஆதரவு என்ற
மகிழ்ச்சியான செய்தியை பார்க்கலாம்

தங்கத்தை விரும்பாத மங்கை உலகில் இல்லை. மக்களும் அரசாங்கங்களும் தங்கத்தை
நிலையான மதிப்பு குறையாத செல்வமாக சேமிப்பாக பார்க்கின்றனர்.

உலக வர்த்தகத்தில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியா பெட்ரோலிய கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் போன்ற சில முக்கிய பொருட்களை அதிக அளவு இறக்குமதி செய்வதால் அதிக செலவாகிறது.

இந்நிலையில் வர்த்தக பற்றாக் குறை மற்றும் அதிகரித்து வரும் தங்கம் விலையை கட்டுப்படுத்தவும் , உள்நாட்டு தங்கம் உற்பத்தியில் தனியார் நிறுவனங்களை அதிக அளவில் ஈடுபடுத்த நிதி ஆயோக் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில்
தங்கம் உற்பத்தியை அதிகரிப்பது குறித்த கொள்கை முடிவுகளை அரசு விரைவில் வெளியிட உள்ளது. தங்கம் குறித்த ஆய்வில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தேசிய உலோகவியல் தரவுகளின் படி,  இந்தியாவில் சுரங்கங்களில் உள்ள தங்க தாது இருப்பு 502 மில்லியன் டன் ஆகும். புவியியல் ரீதியாக பார்க்கும் போது
பீகார் மாநிலத்தில் 44 சதவீதம், ராஜஸ்தான் 25 சதவீதம், கர்நாடகா 21 சதவீதம்,
ஆந்திரா 3 சதவீதம், மேற்கு வங்காளம் 3 சதவீதம் மற்றும் ஜார்க்கண்டில் 2 சதவீதம் உள்ளன.உலக அளவில் தங்க நுகர்வில் இந்திய நாடு இரண்டாம் இடம் வகிக்கிறது. தங்க நுகர்வில் சீனா முதலிடத்தில் உள்ளது.

வெளிநாடுகளில் இருந்து, இந்தியாவின் தங்கம் இறக்குமதி மதிப்பு 2020-21 நிதியாண்டில் 34.6 பில்லியன் அமெரிக்க டாலர். 2021-22 ல் 46.16 பில்லியன் டாலர் . ஓராண்டில் தங்கம் இறக்குமதி 33.41 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021-22 நிதியாண்டில் தங்கம் இறக்குமதியானது, நாட்டின் மொத்த இறக்குமதியில் 7.53 சதவீதமாக இருந்தது.

மேலும் மத்திய வர்த்தகத் துறையின் 102 முக்கிய இறக்குமதி பொருட்களில் அதிக அந்நிய செலாவணி தேவைப்படும் பொருளாகாவும் தங்கம். அத்துடன் உள்நாட்டில் உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளதாகவும் தங்கம் உள்ளது. கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஹட்டி தங்கச் சுரங்கம், 1947 முதல் சுமார் 84 டன் தங்கத்தை உற்பத்தி செய்துள்ளது. உள்நாட்டில் தங்கம் உற்பத்தி அதிகரித்தால் தங்கத்தின் விலை குறையும். புன்னகை புரியும் பெண்கள் அனைவரும் மகிழ்ச்சியாக பொன் நகைகளை அணிவார்கள். மறுபுறம் அரசின் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகமாகி வர்த்தக பற்றாக்குறை கட்டுப்படும்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.