தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்றைய நிலவரப்படி ஒரு கிராம் ரூ.4,518 ஆகவும், ஒரு சவரன் ரூ.36,144ஆகவும் இருந்தது. இந்நிலையில், இன்று கிராமுக்கு 13…

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்துள்ளது.

சென்னையில் ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்றைய நிலவரப்படி ஒரு கிராம் ரூ.4,518 ஆகவும், ஒரு சவரன் ரூ.36,144ஆகவும் இருந்தது. இந்நிலையில், இன்று கிராமுக்கு 13 ரூபாய் உயர்ந்து ரூ.4,531ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதே போல், சவரனுக்கு 104 ரூபாய் அதிகரித்து ரூ.36,248 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த இரு நாட்களில் ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.192 உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.74.30ஆக இருந்த நிலையில், இன்று 40 காசுகள் குறைந்து ரூ.73.90க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.400 ரூபாய் குறைந்து ரூ.73,900ஆக விற்பனையாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.