மேயர் தயான் சந்தின் பிறந்த நாளும், தேசிய விளையாட்டு தினமான இன்று பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஹாக்கி விளையாட்டின் தலைசிறந்த வீரரான மேஜர் தயான் சந்தின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஹாக்கி விளையாட்டில், ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக இந்தியா 3 தங்க பதக்கங்களை வெல்ல உதவியவர் தியான் சந்த். 1928, 1932 மற்றும் 1936 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதற்கு அவர் பெரும் பங்காற்றினார். அவரை கவுரவிக்கும் வகையில் கடந்த ஆண்டு முதல் ஆகஸ்டு 29-ந்தேதி தேசிய விளையாட்டு தினம் என அறிவிக்கப்பட்டது.
ஹாக்கி விளையாட்டின்போது, பந்து தனது கட்டுப்பாட்டில் இருக்கும் வகையிலும், கடத்தி செல்வதிலும் மற்றும் கோல் அடிக்கும் திறமையாலும் வரலாற்றில் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராக அவர் அறியப்படுகிறார். 1979-ம் ஆண்டு தியான் சந்த் மறைந்தபோது, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், டெல்லி தேசிய ஸ்டேடியம் பின்னர் மேஜர் தியான் சந்த் ஸ்டேடியம் என பெயர் மாற்றியமைக்கப்பட்டது.
https://twitter.com/narendramodi/status/1564079378287546368
இன்று தயான் சந்தின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி இன்று அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தேசிய விளையாட்டு தின வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். இதையடுத்து அவர் தனது ட்விட்டர் பதிவில், தேசிய விளையாட்டு தினம் மற்றும் மேஜர் தியான் சந்த் பிறந்த நாளை முன்னிட்டு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். விளையாட்டுக்கு சமீபத்திய ஆண்டுகள் மிகசிறந்த ஒன்றாக உள்ளன. இந்த நிலை தொடர வேண்டும். நாடு முழுவதும் விளையாட்டு பிரபலம் அடைய வேண்டும் என அவர் தெரிவித்து உள்ளார்.







