முக்கியச் செய்திகள் குற்றம்

கள ஆய்வில் அதிரடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்ட அரசு அதிகாரி

கள ஆய்வில், அரசு அதிகாரி அதிரடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் கிராமம் வெடால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்ததால் முளைத்து சேதமடைந்த நிலையில் இருப்பதாகவும், இராமநாதபுரம் மாவட்டம் பட்டிணம்காத்தான் கிராமத்தில் நியாயவிலைக்கடையில் புழுத்துப் போன அரிசி விநியோகம் செய்யப்பட்டதாகவும் புகைப்பட செய்திகள் வெளிவந்ததைத் தொடர்ந்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மை செயலாளர், செங்கல்பட்டு மாவட்ட மண்டல மேலாளர் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட வழங்கல் அலுவலர் ஆகியோரை உடனடியாக கள ஆய்வு செய்து அறிக்கை அனுப்புமாறு உத்தரவிட்டிருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர், செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் கிராமம் வெடால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கள ஆய்வு செய்யப்பட்டத்தில் சுமார் 300 மூட்டைகள் மழை நீரில் நனைந்து சேதமாகும் நிலையில் உள்ளது என்பதும் இதற்கு மூட்டை அடுக்கும் போது கீழே தார்ப்பாய் போடாதது தான் காரணம் என அறியப்பட்டு கொள்முதல் அலுவலர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், பட்டியல் எழுத்தர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த நேரடி கொள்முதல் நிலையத்தில் தற்போது உள்ள 20,000 மெட்ரிக்டன் நெல்லை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலைகளுக்கு விரைந்து அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இதேபோல, இராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட வழங்கல் அலுவலர், துணை பதிவாளர் (பொ விநி) மற்றும் தனி வட்டாட்சியர் ஆகியோர் பட்டிணம்காத்தான் கிராமத்தில் உள்ள நியாயவிலைக்கடையில் கள ஆய்வு மேற்கொண்டதில் தரமான பச்சரிசி நியாயவிலைக்கடையில் இருப்பு இருந்தது கண்டறியப்பட்டதாகவும், பொது மக்களிடம் விசாரணை மேற்கொண்டதில் தரமான அரிசி நியாயவிலைக்கடையில் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிய வந்தது. புகைப்படத்தில் உள்ளவாறு தரமற்ற அரிசி பொது மக்களுக்கு விநியோக செய்யப்படவில்லை என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் நியாயவிலைக்கடைகளில் ஏதாவது ஒரு காரணத்தினால் அரிசி கழிவுகள் மற்றும் விநியோகிக்கப்படாத அரிசி பழுதடைந்த நிலையில் இருக்கும் பட்சத்தில் அவற்றை கிடங்களுக்கு திருப்பி அனுப்பி தரமான அரிசி மட்டுமே நியாயவிலைக்கடையில் விநியோகம் செய்வதை உறுதிசெய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்தி: ‘பூஜையுடன் தொடங்கியது NC22 படப்பிடிப்பு’

மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல் மூட்டைகள் அனைத்தும் மழை நீர் புகாத வண்ணம் பாதுகாப்பான நிலையில் வைக்கத் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், தமிழ்நாடு முதலமைச்சர் பொது மக்களுக்குத் தரமான பொருட்கள் நியாயவிலைக்கடைகள் மூலமாகக் கிடைப்பதையும், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் போன்ற பொருட்கள் பாதுகாப்பாகக் கிடங்குகளுக்கும் ஆலைகளுக்கும் அனுப்புமாறு அவ்வப்போது நடத்தும் ஆய்வில் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகக் கூறியுள்ளார். ஏற்கனவே அரசு அறிவுறுத்தியவாறு அந்தந்த மட்டத்தில் மாவட்ட நிர்வாகம், கூட்டுறவுத் துறை துணை பதிவாளர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வணிப கழக மண்டல மேலாளர்கள் அவ்வப்போது ஆய்வு மற்றும் மேற்பார்வை செய்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைத்தும் உடனுக்குடன் கிடங்கு மற்றும் அரிசி ஆலைகளுக்கு அனுப்பவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நியாயவிலைக்கடைகளில் தரமான பொருட்கள் குடும்ப அட்டை தாரர்களுக்கு விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஈகுவடார் சிறை கலவரம்: பலி எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு

Halley Karthik

திடீர் சரண்டர்: குறை தீர்க்கும் அதிகாரியை நியமித்தது ட்விட்டர்!

Ezhilarasan

இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்!

Jayapriya