விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரிப்பு.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைக் கடந்த சில ஆண்டுகளாகத் தவிர்த்து வருகிறார். கட்சி தொடர்பான பணிகளிலும் அவர் பெரிதாக ஈடுபடுவதில்லை. குடும்பத்தினரே அதைக் கவனித்து வருகின்றனர். விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவப் பரிசோதனைக்காக அவ்வப்போது மருத்துவமனை செல்வது வழக்கம். சமீபத்தில் பரிசோதனைக்காக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அண்மைச் செய்தி: ‘’தங்கும் வசதிகளுடன் குடிமைப்பணி முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி’ – தலைமைச்செயலாளர்’
இந்நிலையில், நீண்ட வருடங்களாக இருந்த நீரிழிவு பிரச்சினையால் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மூன்று விரல்கள் அகற்றப்பட்டுள்ளன. மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் நலமுடன் இருக்கிறார். மேலும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் கேப்டன் விஜயகாந்த் வீடு திரும்புவார் என்று தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தொலைப்பேசி வாயிலாக விஜயகாந்த்தை தொடர்புகொண்டு நலம் விசாரித்துள்ளார்.








