உக்ரைனில் உள்ள மாணவர்களை மீட்பதில் தமிழ்நாடு அரசின் சிறப்பு குழு, எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என தங்களுக்கு தெரியவில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, பிரதமர் மேற்பார்வையின் கீழ் உக்ரைனிலுள்ள இந்தியர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரக்கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது.
மாணவர்களை மீட்பதில் மத்திய – மாநில அரசுகளுடனான ஒருங்கிணைப்பு சிறப்பாக உள்ளது. தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள சிறப்பு குழு எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரியவில்லை எனக்கூறிய அவர், இவ்விவகரத்தில் மேற்கொண்டு கருத்து கூறவிரும்பவில்லை எனவும் அரிந்தம் பக்சி தெரிவித்தார்







