இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்.
இந்தியா-இலங்கை மோதும் முதலாவது டெஸ்ட போட்டி மொகாலியில் இன்று தொடங்குகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20, 2 டெஸ்ட் தொடர் என விளையாடி வருகிறது. டி20 தொடரை 3 க்கு 0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
அடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நடக்கவுள்ளது. முதலாவது போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் இந்த போட்டி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
அதே நேரத்தில், விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து ஒதுங்கிய பிறகு ரோகித் சர்மா அனைத்து விதமான போட்டிக்கும் இந்திய அணியின் முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் இந்தியா அடியெடுத்து வைக்கும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும்.
மேலும், மூத்த வீரர்கள் ரஹானே, புஜாரா ஆகியோர் உள்ளூர் போட்டிக்கு சென்றுள்ளதால், அவர்கள் இருவரும் இல்லாமல் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா விளையாடப்போகும் முதல் டெஸ்ட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.








