“விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் வகையில், முதற்கட்டமாக 100 பேருக்கு அரசுப் பணி” – துணை முதலமைச்சர் #UdhayanidhiStalin!

விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் வகையில், முதற்கட்டமாக 100 பேருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். விருதுநகர் மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று…

"Government jobs for 100 in first phase to honor sports players" - Deputy Chief Minister #UdhayanidhiStalin!

விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் வகையில், முதற்கட்டமாக 100 பேருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.

விருதுநகர் மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு இணைந்து துணை முதலமைச்சருக்கு செங்கோல் வழங்கினர்.

விழாவில், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 2111 பேருக்கு ரூ.42.96 லட்சம் மதிப்பில் பரிசு தொகைகள், 450 ஊராட்சிகளுக்கு ரூ.2.84 கோடி மதிப்பில் விளையாட்டு உபகரண தொகுப்புகள், 255 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.45.39 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா, 20 மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் புரிய வங்கி கடன், ஆவின் விற்பனை நிலையம், ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 2,386 பயனாளிகளுக்கு ரூ.3.85 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு

நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:

நமக்கும், விருதுநகருக்கும் இன்றைய நாள் பொன் நாள். துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினின் முதல் சுற்றுப்பயணம் இது. அமைச்சராக இல்லாமல் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பது எங்களுக்கு பெருமை. முதலமைச்சருக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கே உதயநிதி தான் துணை”

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

தொடர்ந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியதாவது:

விருதுநகருக்கும், உதயநிதிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒரு ராசி உண்டு. விருதுநகரில் கால் வைத்துள்ள உதயநிதி பயணம் இனி சிறப்பாக இருக்கும். துணை முதலமைச்சர் எனக் கூறி கோட்டையில் அமராமல் உங்களை சந்திக்க வந்துள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்” என பேசினார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் சென்னைக்கு வெளியே இது முதல் நிகழ்ச்சி. தென்மாவட்டம் என்பது வீரத்திற்கு பெயர் பெற்ற மாவட்டம். தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெங்கும் உள்ளவர்களை தலைசிறந்த வீரர்களாக உருவாக்கி வருகிறோம். இதுவரை 18 மாவட்டங்களில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களுக்கும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

முதல்வர் கோப்பை போட்டியில் கடந்த ஆண்டு 6 லட்சத்து 71 ஆயிரம் பேர் பங்கேற்ற நிலையில், இந்த ஆண்டு சுமார் ஒரு மடங்கு அதிகரித்து 11 லட்சத்து 56 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.

தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர்கள் உலக அளவில் பல சாதனைகளை படைத்து வருகின்றனர். அவர்களை கௌரவிக்கும் வகையில், முதற்கட்டமாக 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி வழங்க உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”

இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.